Breaking News

புயல் நிவாரண நிதியை வியாபார, வர்த்தக நிறுவனங்கள் வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட வேண்டும்..!! அதிமுக வலியுறுத்தல்..

 


புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் புயல் நிவாரணத்திற்காக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும், அதே நேரத்தில் பெரு வெள்ளத்தின் காரணமாக 50,000-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டாம் கட்ட நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும் என்றும், முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு ரூ.25,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் புயல் நிவாரண நிதியை அரசு உருவாக்க வேண்டும் என்றும், இதற்கு புதுச்சேரியில் உள்ள வியாபார, வர்த்தக நிறுவனங்களை புயல் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.


No comments

Copying is disabled on this page!