பாண்டியபதி தேர்மாறன் ஒரு சமுதாயத்தின் தலைவர் அல்ல: தென்தமிழகத்தை ஆண்ட சிறந்த மன்னர்! அமைச்சர் கீதாஜீவன்..
பாண்டியபதி தேர்மாறன் ஒரு சமுதாயத்திற்கான தலைவர் அல்ல, தென்தமிழகத்தின் மன்னர், தமிழர் அனைவரும் அவரை கொண்டாட வேண்டும் என அவரது 272 ஆம் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
பாண்டியபதி தேர்மாறனின் 272ஆம் ஆண்டு பிறந்தநாள்விழா, நூல்கள் வெளியீடு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மும்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி, தேர்மாறன் வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பரதர் நல தலைமைச் சங்க பொருளார் காஸ்ட்ரோ வரவேற்று பேசினார். வில்லியம் மஸ்கர்னாஸ் தலைமை வகித்தார். மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா முன்னிலை வகித்தார். பனிமய அன்னை பேராலய அதிபர் ஸ்டார்வின் அடிகளார் ஆசியுரை வழங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணைத்தலைவ் ஏ.பி.சி.வீ.சண்முகம், வீராங்கனை பேரவை ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, மதிமுக நக்கீரன், குரூஸ்பர்னாந்து நற்பனி மன்ற தலைவர் ஹெர்மன் கில்டு ஆகியோர் பாண்டியபதி தேர்மாறன் வரலாற்றை எடுத்துக்கூறி பேசினர்.
விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,
தொன் கபிரியேல் தெக்குரூஸ் பரதவர்ம பாண்டியன் என்ற பாண்டியபதி தேர்மாறன் ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர், தூத்துக்குடி பனிமய அன்னை பேராயலத்திற்கு தங்க தேரை செய்து கொடுத்தவர். அவரது வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் தூத்துக்குடியில் இன்றும் சில பகுதிகளில் அவரது கல்வெட்டுக்கள் உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் அவர் சார்ந்த அனைத்து கல்வெட்டுகளையும் தொல்லியல் துறை மூலம் ஆராய்ச்சி செய்ய ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் அவர் வாழ்ந்த வீடு நினைவு மண்டபமாக மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திர பேராட்ட வீரர்களையும், தியாகிகளையும் போற்றுகிற அரசு திராவிட அரசு. பாண்டியபதி தேர்மாறன் ஒரு சமுதாயத்திற்கான தலைவர் அல்ல தென்தமிழ்நாட்டை ஆண்ட மிகச்சிறந்த மன்னர். எனவே நாம் அனைவரும் ஒன்றுமையுடன் அவரது வரலாற்றை உலகுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்றார்.
விழாவில், நெய்தல் அன்டோ எழுதிய நீங்கள் கேட்காதவை, கலாபவன் வாஸ் எழுதிய கயலின் கருவறையில் இருந்து ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது, மீனவரணி அமைப்பாளர் டேனியல், மாமன்ற உறுப்பினர்கள் எடின்டா, ரிக்டா, மெட்டில்டா, பவானி, தொழிலாளர் நலன்காக்கும் சங்கு வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜபோஸ் ரீகன், மநீம மாவட்ட தலைவர் ஜவஹர், ஞாயம் ரோமால்ட், சேவியர் வாஸ், மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்க செயலாளர் ராஜ், ஸீ சைடு ரோட்டரி செயலாளர் யோகேஷ், மனோஜ்குமார் கொரைறா, தமிழ் மீனவர் கூட்டமைப்பு தலைவர் ரஜினி மகி, தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா, ஜோபாய் கோமஸ், உவரி எழிலன், பெர்டின் ராயன், ஆசிரியர் லூயிஸ், வேம்பார் ஊர் தலைவர் ஜோ வளன், புன்னகாயல் ஊர் தலைவர் குழந்தை, ஏரல் பெஸ்டி, பழையகாயல் ஆரோக்கியம், அமலிநகர் செல்வராஜ், திரேஸ்புரம் பாஸ்கரன், தொழிலதிபர்கள் கிஷோர், பிரையர், பெர்க் மற்றும் பெனோ உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் நெய்தல் அன்டோ நன்றி கூறினார்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments