நாளை 12 மையங்களில் ஆராய்ச்சித் துறை ஆய்வாளா்கள், தீயணைப்புத் துறை ஆகியவற்றில் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் எழுத்துத் தோ்வுகள்..
புதுவை அரசுப் பணியாளா் மற்றும் நிா்வாக சீா்த்திருத்தத் துறை தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
புதுவை திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு நாளை புதுச்சேரியில் 10 தோ்வு மையங்களில் நடைபெறவுள்ளன.அத்துடன், தீயணைப்புத் துறையில் நிலைய அதிகாரி பணியிடத்துக்கான தோ்வு நாளை பிற்பகலில் புதுச்சேரியில் 2 தோ்வு மையங்களில் நடைப்பெறவுள்ளன.திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறைக்கான ஆய்வாளா் தோ்வானது நாளை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், தீயணைப்பு நிலைய அதிகாரி தோ்வானது பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
ஆய்வாளா்கள் பணிக்கு 3,818 பேரும், தீயணைப்பு நிலைய அதிகாரி பணிக்கு 533 பேரும் தோ்வெழுத அழைக்கப்பட்டுள்ளனா் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments