300 மாணவ, மாணவிகளை கொண்டு "உலக தியான தினம்"
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி பள்ளி வளாகத்தில் உலக தியான தினம் கொண்டாடப்பட்டது. முதல் உலக தியான தினமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 21 தேதியன்று "வேர்ல்டு மெடிடேஷன் டே " என்ற ஆங்கிலச் சொல்லில் இந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்ச்சியானது சீர்காழியில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன் மற்றும் ச.மு.இந்து மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்வில் மனவளக்கலை மன்ற பேராசிரியர் ஏ செல்லம்மாள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்கங்களின் மண்டல -20துணை ஆளுநர் வி.சி. பாலாஜி,, மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன் சங்கத்தின் தலைவர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வில் டெம்பிள் டவுன் சங்கத்தின் செயலர் ஆர் சி வினோத் இணை செயலர் பி கார்த்திக், மனவள கலை மன்றத்தின் பொருளாளர் துணை பேராசிரியர் செந்தில், ஆசிரியர் முத்துலெட்சுமி , பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் மார்க்கண்டன், சக்திவேல், கபிலன் உடற்கல்வி இயக்குனரும், உதவி தலைமை ஆசிரியருமான எஸ். முரளிதரன் மற்றும் ஆசிரியர்கள்,, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments