ரூ.67 செலவில் ஒருங்கிணைந்த விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மையம் அமைப்பதற்கான பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் பூஜை செய்து தொடங்கி வைத்தார்..
முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.67 லட்சம் மதிப்பில், முத்தியால்பேட்டை- கருவடிக்குப்பம் சாலையில் உள்ள உபயோகம் இல்லாத கழிப்பிடத்தை அகற்றிவிட்டு, ஒருங்கிணைந்த விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மையம் அமைப்பதற்கான துவக்க விழா இன்று நடைபெற்றது.
விழாவில்,தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். மேலும் விரைந்து பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் கந்தசாமி,செயற்பொறியாளர் சிவபாலன்,உதவிப் பொறியாளர் பழனி ராஜா,இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உட்பட அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments