Breaking News

புதுச்சேரியில் குறைந்த வட்டியில் ரூ. 1 லட்சம் கடன் பெற ரூ. 1.26 லட்சம் பணத்தை இழந்த பெண்..


அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், பிரபல தனியார் பைனான்சில் கடன் வாங்கி தவணைகளை சரியாக செலுத்தி வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன், அப்பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் அதே பைனான்சில் ரூ. 1 லட்சம் கடன் உடனடியாக வாங்கி தருகிறேன் என, கூறினார்.

தான் ஏற்கனவே வாங்கிய பைனான்ஸ் கம்பெனியில் இருந்து பேசுவதாக நினைத்து, மர்ம நபர் கூறியதை கேட்டு ஏற்கனவே கட்ட வேண்டிய நிலுவை தொகை மற்றும் புதிய கடனுக்கான செயலாக்க கட்டணம் என பல தவணையாக ரூ. 1.26 லட்சம் பணம் அனுப்பினார்.

ஐந்து நாட்கள் கடந்தும் கடன் தொகை கிடைக்காததால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!