Breaking News

கொதிக்கும் நீரை ஊற்றி கணவனை கொன்ற மனைவி கைது.

ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த லாலாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ் என்பவர் லோடு மேனாக வேலை செய்து வந்தார், இந்நிலையில் இவரது மனைவி அதே பகுதியில் தனியார் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தார். தன் மனைவி அமராவதி எப்போதும் தன் நண்பர்களுடன் செல்போனில் பேசிக் கொண்டிருப்பார். 


இதைக் சுரேஷ் கண்டித்தார், எப்போதும் தன் மீது. சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறாய் என அமராவதி ஆத்திரமடைந்த தன் கணவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கொதிக்கும் வெந்நீரை அவர் மீது ஊற்றினார், இதனால், அவர் அலறி கத்தியுள்ளார். இதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், இந்த சம்பவம் கடந்த 18-ம் தேதி அன்று நடந்தது கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார் சுரேஷ். இந்நிலையில் நேற்று நள்ளிரவு பரிதாபமாக சுரேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்து வந்த சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!