புதுவை கடலில் அலைகள் சீற்றம் கடற்கரையில் இறங்க தடை..
புதுவையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குவது கடற்கரை சாலை. 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலையை ஏரா ளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து மகிழ்வது வழக்கம். தற்போது குளிர்ந்த காற்றுடன் ரம்யமான சூழ்நிலை நிலவுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்து கடற்கரை அழகை ரசித்து செல்கின்றனர். வங்க கட லில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக புதுவை கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணி களை கடற்கரை மணலில் இறங்க போலீசார் தடை விதித் துள்ளனர்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ஏராளமான வெளிநாட்டவர் புதுவைக்கு வர தொடங்கியுள்ளனர்.
உள்ளூர் மக்களும், வெளி மாநில சுற்றுலா பயணிகளும் கடற்கரைக்கு வந்து கடல் அழகை ரசித்து நிற்க அனுமதிக்கும் போலீசார், அவர்கள் கடற்கரையில் இறங்க முயற்சிக்கும் போது, வானிலை எச்சரிக்கையை கூறி அறிவுறுத்தி அவர்களை வெளியேற்றினர்.
No comments