Breaking News

புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பிற்காக, ஒயிட் டவுனில் வாகனங்கள் செல்ல தடை, பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்.

 


புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பிற்காக, ஒயிட் டவுனில் வாகனங்கள் செல்ல தடை. பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்.


புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட ஆயிரக்கணக்கான வெளிமாநில சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.ரிசார்ட்டுகள், தனியார் நிர்வகிக்கும் கடற்கரை, ஓட்டல்களில் மது விருந்துடன் கூடிய பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கடற்கரை சாலை மற்றும் ஓட்டல்களில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நகர மற்றும் கடற்கரை சாலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


சுற்றுலா பயணிகள் கடலில் இறங்காதபடி தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் 2000க்கும் அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இன்று 31ம் தேதி மதியம் 2:00 மணி முதல் நாளை 1ம் தேதி காலை 9:00 மணி வரை ஒயிட் டவுன் பகுதிக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த தற்காலிக பார்க்கிங் வசதிசெய்யப்பட்டுள்ளது.தற்காலிக பார்க்கிங் இடத்தில் இருந்து கடற்கரைக்கு செல்ல பி.ஆர்.டி.சி., மூலம் 30 இலவச பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், வீதிகள் எல்லாம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ரம்மியமாக காட்சியளிக்கின்றன.


கடற்கரை சாலையில் நள்ளிரவு 12.30 மணி வரை புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்படுவர். மதுபார்களில் இரவு ஒரு மணி வரை மது விநியோகம் செய்ய கலால்துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.மாநிலத்தின் எல்லை பகுதியிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!