வாணியம்பாடியில் தென்றல் ஏஜென்சி கடை மற்றும் குடோன் பூட்டை உடைத்து 6 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த தென்றல் தமிழ் என்பவருக்கு சொந்தமான தென்றல் ஏஜென்சி கடை மற்றும் குடோன் வைத்து சிமெண்ட் மற்றும் கம்பிகள் விற்பனை செய்து வருகிறார், நேற்று வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற போது, இரவு குடோனின் பின்பக்கம் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உள்ள வைக்கப்பட்டிருந்த 5.45 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளார், வழக்கம்போல் கடை உரிமையாளர் இன்று கடைக்கு வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைக்கப்பட்டிருந்த பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், பின்பு உடனடியாக இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் சம்பவத்தைக் குறித்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருட்டு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் அப்பகுதியில் பரவி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் பு.லோகேஷ்.
No comments