பள்ளி எதிரே புதியதாக கேளிக்கை விடுதியுடன் கூடிய பார் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வி.சி.கவினர் ஆர்ப்பாட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் ஏற்கனவே ஒரே இடத்தில் மூன்று மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.
அப்பகுதியை சுற்றிலும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தனியார் பள்ளிகள் தனியார் மருத்துவமனைகள் வங்கிகள் என ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது., இந்த நிலையில் பேருந்து நிறுத்தம் அருகில் மேல்நிலை பள்ளி எதிரில் புதியதாக குளிர்சாதன வசதியுடன் கூடிய கேளிக்கை விடுதி மட்டும் பார் நாளை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் பாரை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளிக்கு எதிராக பார் திறக்க அனுமதி வழங்கிய அதிகாரிகளை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கூறிய விடுதலை சிறுத்தைகளின் கட்சி மாவட்ட செயலாளர் ஓம் பிரகாசம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் ஏற்கனவே ஒரே இடத்தில் மூன்று மதுபான கடைகள் செயல்பட்டு வருவதால் சமூகவிரோதிகளின் அட்டகாசங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பெண்கள் பள்ளி மாணவிகள் இந்த பகுதி வழியாக செல்வதற்கு மிகுந்த அச்சப்பட்டு வருவதாகவும் இப்போது இந்த குளிர்சாதன வசதியுடன் கூடிய பாருக்கு அனுமதி எப்படி வழங்கினார்கள் இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் தொடர்ந்து இந்த குளிர்சாதன பார் திறக்கப்பட்டால் இப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் நடக்க கூடும் இடமும் எனவே இதனை திறக்க கூடாது என தெரிவித்தனர் மேலும் ஜனவரி 10ஆம் தேதி பொதுமக்களை திரட்டி கண்டன போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்
பு.லோகேஷ்.
No comments