Breaking News

நாட்றம்பள்ளியில் ரூ 33 லட்சம் மோசடி ஆதாரமற்ற குற்றச்சாட்டு!


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா கே. பந்தராபள்ளி பகுதியைச் சேர்ந்த முனிசாமி மகன் வினோத்குமார்  நாட்றம்பள்ளி பகுதியில் இருசக்கர வாகனம் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 2021 ஆம் வருடம் ஆத்தூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் பணம் தேவைப்படுகிறது எனக்கூறி ரூபாய் 23 லட்சம் பெற்றுள்ளதாகவும் பணம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் எந்த அக்ரிமெண்ட்  எதுவும் இல்லை பணம் பெற்றதாக கூறுகின்றனர். 


கடந்த மூன்று ஆண்டுகளாக இதுகுறித்து எந்த ஒரு புகார் தெரிவிக்காத நிலையில் மனுதாரர் தற்போது ஏதோ உள்நோக்கத்திற்காக மனு அளித்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் ஜங்காலபுரம் பகுதியை சேர்ந்த  சுந்தரபாண்டியன் அவரிடமும் ரூ 10 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் அவரிடமும் எந்த ஒரு ஆவணமும் இல்லை எனக் கூறப்படுகிறது. கடந்த மூன்று வருடங்களாக பணம் கொடுத்த நபர்கள் வழக்கு பதிவு செய்யாமல் தற்போது ஊராட்சி மன்ற தலைவர் மீது நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் இருதரப்பினரும் தனித்தனியாக புகார் மனு அளித்துள்ளார். 

No comments

Copying is disabled on this page!