உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகள்.
தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராதாகிருஷ்ணன், மகேந்திரன், பாரதி, ஜோசப் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர் வரவேற்றார்.
விழாவில், ஏழைஎளியவர்களுக்கு ஃபிரிட்ஜ், தையல் இயந்திரங்கள், கிரைண்டர்கள், அயர்ன்பாக்ஸ், சைக்கிள் மற்றும் 150 கிரிக்கெட் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், தனது பிறந்தநாளை ஆடம்பரம் இல்லாமல், ஆட்டம் பாட்டம் இல்லாமல், நலத்திட்ட உதவிகள் வழங்கி மக்கள் பயன்பெறும் வ¬கியல் அமைதியாக கொண்டாட வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனடிப்படையில் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 தொகுதிகளிலும் வார்டுகள் முதல் ஓன்றியம் வரை பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பயிற்சி பாசறை நடத்தி அதன்மூலம் கட்சி பணியையும் மேற்கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். அதன்பிறகு கட்சி பொறுப்பு மற்றும் ஆட்சி பொறுப்புக்கு வந்தபிறகு செய்த பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியது மட்டுமின்றி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார் உதயநிதி என்று புகழாரம் சூட்டியுள்ளார். சிலர் நேற்று கட்சி ஆரம்பித்துவிட்டு இன்று நான் முதலமைச்சராக போகிறேன் என்றெல்லாம் பேசிக்கொண்டு வருகிறார்கள். தமிழர்களின் நலன் காக்க தொடர்ந்து திமுக பணியாற்றி வருகிறது. தமிழர்களின் திருநாளான பொங்கல் அன்று ஓன்றிய அரசு சிஏ தேர்வை அறிவித்தது. இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தற்போது சிஏ தேர்வை ஒன்றிய அரசு மாற்றி வைத்துள்ளது.
ஹிந்தி படிப்பவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. ஹிந்தி தினிப்பதை தான் எதிர்க்கிறோம். தமிழ் மொழியும் ஆங்கிலமும் பிரதான மொழிகளாக இருந்து வருவதன் மூலம் மக்கள் நன்மையடைந்து வருகின்றனர். தமிழ்நாடு அனைத்து துறையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்றைய மாணவர்கள் இதுபோன்ற பல வரலாறுகளை தெரிந்து கொள்வதற்கு புத்தகங்களை படிக்க வேண்டும். விளையாட்டு அவசியம். இந்த வயதில் கல்லும் கரையும் அப்படிபட்ட பருவம் இது. உதயநிதி இந்த துறைக்கு பொறுப்பேற்றபின் விளையாட்டுதுறையின் தலைநகரமாக சென்னை மாறியது. மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டு பல கிராமங்களில் விளையாட்டு துறையையும் உருவாக்கி வருகிறார். இதுபோன்ற நல்ல பழக்கவழக்கங்களை மாணவர்கள் கடைபிடித்துக் கொண்டு தேவையில்லாத தீயபழக்கத்திற்கு ஆளாகாமல் நல்ல சிந்தனையுடன் வாழ்வில் வளர்ச்சியடைய வேண்டும். 2026ல் நடைபெறவுள்ள தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு அனைவரும் பணியாற்றிட வேண்டும் என்றார்.
விழாவில், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், ஓன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, ராமசுப்பு, பேரூர் செயலாளர் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரிதங்கம், ராஜா, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரவி, பிரவீன்குமார், சிவக்குமார் (எ) செல்வின், சங்கரநாராயணன், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போல்பேட்டை பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா பெரியசாமி நன்றி கூறினார்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments