Breaking News

ஜனவரி 12 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.

 


புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தலைமையகத்தில், உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் டி.ஜி.பி ஷாலினி சிங் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. புதுச்சேரியில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 2,000 காவலர்கள் மற்றும் 500 தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். கடற்கரையில் கொண்டாட்டங்களுக்கு வருபவர்களுக்காக 10 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் இரவு 12.30 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 11 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தலைமையில் தலைக்கவசம் அணிவது குறித்து மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. 

ஜனவரி 12 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். வரும் பொங்கல் பண்டிகைக்குள் காவலர்களுக்கு தேர்தல் பணிக்கான அலவனஸ் மற்றும் யூனிபார்ம் அலவனஸ் வழங்கப்படும். அதேபோல் காலியாக உள்ள 70 காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்கான அறிவிப்பு இரண்டு தினங்களில் வெளியிடப்படும் என தெரிவித்தார்கள்.

No comments

Copying is disabled on this page!