ஓடையில் குளிக்க சென்ற 2 மாணவிகள் ஓடையில் அடித்து செல்லப்பட்டனர். மீட்கப்பட்ட ஒரு மாணவி உயிரிழந்த நிலையில் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்..
புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான கிளியனூர் அடுத்த கொஞ்சமங்கலம் பகுதியில் உள்ள கலிங்கள் ஓடையில் பெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த மழையினால் நீர் நிலைகள் நிரம்பி விவசாய நிலங்கள் மற்றும் ஓடையில் அதிக வெல்நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் இன்று விடுமுறை என்பதால் கொஞ்சமங்கலம் பகுதியை சேர்ந்த 4 மாணவிகள் புதுக்குப்பம் கனிங்கள் ஓடையில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது மாணவிகள் அனுஸ்ரீ,நர்மதா ஆகிய இருவரும் திடீரென ஓடையில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் நர்மதாவை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் மயமான அனுஷ்டியை தேடும் பணியில் போலிசார் மற்றும் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி நர்மதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.
No comments