கனமழை காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து சேதம் ஊராட்சி மன்ற தலைவர் வினிதா முருகன் துரித நடவடிக்கை..
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மேல் பாதி ஊராட்சியில் நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு மற்றும் வீட்டினுள் தண்ணீர் புகுந்து காணப்படும் நிலையில் பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் மீரா தனது ஒன்றை வயது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த பொழுது கனமழையால் அவரது ஓட்டு வீடு இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக தாய் மற்றும் குழந்தை உயிர் தப்பினர் அதோடு அதே ஊரைச் சேர்ந்த பிரியா அறிவழகன் இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் பிரியா தனது இரண்டு மகனுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதமாக சுவர் இணைந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது அதோடு ஊராட்சி மன்ற தலைவர் வினிதா முருகன் அதிகாலை 6 மணி அளவில் ஜேசிபி இயந்திரம் மூலம் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments