மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி..
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு நாளை டிசம்பர் 28ம் தேதி நிறைவு பெறுகிறது. அவரது நினைவு நாள் கேப்டன் ஆலயத்தில் குருபூஜையாக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கேப்டன் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கடைவீதியில் தேமுதிக மாவட்ட அவை தலைவர் ஒன்றிய கவுன்சிலருமான கே எஸ் கிருஷ்ணன் தலைமையில் கேப்டன் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் செம்பனார்கோவில் தேமுதிக ஒன்றிய செயலாளர்கள் எஸ். ராஜா, சி. மோகன்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் எம்.பி. கோதை, தேமுதிக நிர்வாகிகள் ஆப்பிள் ராஜ், சேதுராமன், ஒன்றிய துணை செயலாளர் பா. பாக்யராஜ், மற்றும் ஏராளமான பொதுமக்களும் பேருந்து பயணிகளும் கேப்டன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
No comments