Breaking News

வரும் 23ம் தேதி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்.அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் அறிவிப்பு..


தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதாராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 29 மற்றும் 30 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். முதலமைச்சரின் நிகழ்ச்சிகளை சிறப்பிப்பதற்கும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காகவும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 4.30 மணிக்கு, மாவட்டக் கழக அலுவலகத்தில் அவைத் தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற உள்ளது. 

இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மட்டும் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

No comments

Copying is disabled on this page!