Breaking News

தூத்துக்குடியில் திருவள்ளூவர் புகைப்பட கண்காட்சி கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்!

 


தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சியை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகள் வரைந்த திருக்குறள் புகைப்பட கண்காட்சி தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இதனை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. துவக்கி வைத்து, பள்ளி மாணவர்களால் வரையப்பட்ட திருக்குறள் ஓவியக் கண்காட்சியைப் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், கவுன்சிலர்கள் அதிஷ்டமணி, ஜெயசீலி, வைதேகி, பவானி, விஜயகுமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, துணை அமைப்பாளர் பெல்லா, மின்வாரிய தொழிலாளர் சங்க தலைவர் பேச்சிமுத்து, பெருமாள் கோவில் அறங்காவலர்குழு தலைவர் செந்தில்குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகரன் மற்றும் மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!