பிரசித்தி பெற்ற கோவில்களில் மார்கழி மாதத்தை ஒட்டி திருவாடுதுறை ஆதீனம் சிறப்பு வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்கழி மாதத்தை ஒட்டி தனுர் மாத வழிபாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தென்னிந்தியாவில் உள்ள சைவ ஆதீனங்களில் முதன்மையான ஆதீனம் திருக்கயிலாய பரம்பரை திருவாடுதுறை ஆதீனம் வழிபாடு இதில் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ வாள் நெடுங்கண்ணி அம்மன் சமேத தான்தோன்றீஸ்வரர் கோவிலில் இன்று மார்கழி மாத சிறப்பு வழிபாட்டில் திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தரிசனம் செய்து வழிபட்டார் முன்னதாக கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பிலும் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் நலச் சங்கம் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது பின்னர் சுவாமி, அம்பாள், சிறப்புலி நாயனார் சன்னதிகளுக்கு சென்று திருவாடுதுறை ஆதீனம் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார் ஆதீனம் வருகை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர் அங்கிருந்து பிரசித்தி பெற்ற திருமெய்ஞானம் கோவில் மற்றும் திருவிடைக்கழி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வழிபட்டார்.
No comments