Breaking News

ஈரோட்டில் பட்டியலின மக்களுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட 250 ஏக்கர் நிலத்தை வழங்காமல் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் மனு அளித்தனர்.


ஈரோடு மாவட்டம் அந்தியூர் மாத்தூரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக நில குடியற்றின் சங்கத்தின் சார்பாக நிலம் இல்லாத பட்டியலின மக்களுக்கு 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதனைத் தொடர்ந்து 250 ஏக்கர் நிலத்தை அரசால்  உறுதிப்படுத்தப்பட்டு ஆட்களையும் தேர்வு செய்தும் கடந்த 30 ஆண்டுகளாக பட்டினில மக்களுக்கு அந்த நிலம் வழங்கப்படவில்லை


இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக மாவட்ட வருவாய் அலுவலரையும், மாவட்ட ஆட்சித் தலைவரையும்,சந்தித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் நில நிர்வாக ஆணையர் அறிக்கை கேட்டு அதை மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பியும் எந்த ஒரு அறிக்கையை சமர்ப்பிக்காமல்  நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மெத்தன போக்கை கடைப்பிடித்ததை கண்டித்து கடந்த செப்டம்பர் மாதம் அந்தியூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்


ஆனால் அந்த ஆர்ப்பாட்டத்தையும் மாவட்ட வருவாய் துறை கண்டுகொள்ளாமல் மெத்தன போக்கை காட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில்  விரைவாக  மாத்தூர் பகுதியில் வாழக்கூடிய பட்டியல மக்களுக்கு 250 ஏக்கர் நிலத்தை பகிர்ந்து வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்துமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன்  அளித்துள்ளனர்  


மேலும் இதில் மாநில அரசும்,வருவாய்த் துறையும் மெத்தனம் போக்கை  காட்டினாள் வருகின்ற ஜனவரி மாதம் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள நில நிர்வாக அலுவலகத்தில் தலித் விடுதலை இயக்கமும்,பல ஜனநாயக அமைப்பினரும் ஒன்று சேர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர். 

No comments

Copying is disabled on this page!