வாக்காளர் விழிப்புணர்வு பேரணி கோட்டாட்சியர் சுரேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் வருவாய் துறை சார்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ் தலைமை வகித்தார். சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி, நகராட்சி ஆணையர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் இளவரசு வரவேற்று பேசினார். விழிப்புணர்வு பேரணியை கோட்டாட்சியர் சுரேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில்,.... 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பதன் மூலம் வலுவான ஜனநாயகத்தை உருவாக்க முடியும். 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவ, மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுக்கும் , அருகில் உள்ள பொதுமக்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும் என்றார். விழிப்புணர்வு பேரணியானது கச்சேரி ரோடு, கடைவீதி, மருத்துவமனை சாலை, தேர் தெற்கு வீதி வழியாக பழைய பேருந்து நிலையத்தை வந்து அடைந்தது. இந்த பேரணியில் வருவாய்த்துறை அலுவலர்கள், பணியாளர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் ஒருங்கிணைப்பாளர் அரிமா சங்க மாவட்டத் தலைவர் சக்திவீரன் நன்றி கூறினார்.
No comments