இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களை கோவிலின் உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.?
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியப்பட்டு மற்றும் ஈஸ்வரகண்ட நல்லூர் ஆகிய இரு கிராமங்களின் எல்லையில் அமைந்துள்ள அய்யனார் கோவிலுக்கு உரிமை கொண்டாடிய இரு கிராம மக்களிடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரச்சனையின் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்கு இந்த கோவில் கொண்டுவரப்பட்டது.
இரண்டு கிராம மக்களும் வழிபட்டு வரும் மிகவும் பழமை வாய்ந்த இந்த அய்யனார் கோவில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றதோடு இதுவரை நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான பாலாயம் நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்த நிலையில் . நிகழ்ச்சி அழைப்பிதழில் பெரியப்பட்டு கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலின் அச்சிடப்பட்டுள்ளதால் .ஆத்திரமடைந்த ஈஸ்வர கண்ட நல்லூர் கிராம மக்கள் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களை கோவிலின் உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி கோவிலின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்கள் கிராமத்திற்கு சொந்தமான கோவில் என அறிவிக்க வேண்டும் எனவும் அவ்வாறு அறிவிக்கவில்லை என்றால் கும்பாபிஷேகம் நடத்த விட மாட்டோம் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் இரு கிராமங்களிடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
No comments