Breaking News

உலக நூலக தந்தை பயின்ற பள்ளிக்கு ரூ. ஒன்றரை லட்சத்தில் சாலை அமைத்துக் கொடுத்த பள்ளி முன்னாள் மாணவர்.



மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 1896 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட (சபாநாயக முதலியார் இந்து )அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 125 ஆண்டைக் கடந்த இப்பள்ளியில் தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். உலக நூலக தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர். அரங்கநாதன் இப்பள்ளியில் தான் தனது பள்ளி கல்வியை பயின்றார். அவரது நினைவாக பள்ளியில் தற்போத நூலகத் தந்தை அரங்கநாதன் மார்பளவு சிலையுடன் நூலக கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பள்ளியில் பயின்ற சீர்காழி பகுதியை சேர்ந்தவரும் தமிழ்ச் சங்கத் தலைவருமான முன்னாள் மாணவர் மார்கோனி இப்பள்ளியின் மாணவ மாணவிகள் பயன்படுத்தும் நுழைவு வாயில் முதல் பள்ளி கட்டடம் வரையிலான பாதை கரடு முரடாக இருப்பது குறித்து அறிந்து தனது சொந்த செலவில் ரூ.ஒன்றரை லட்சம் மதிப்பில் தார் சாலையாக மாற்றி தர முன் வந்தார். அதன்படி முதற்கட்டமாக ரெட் மிக்ஸ் சிமெண்ட் கலவை கொட்டப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. முன்னாள் மாணவரின் இந்த பணியை பொதுமக்கள் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

No comments

Copying is disabled on this page!