சங்கராபரணி ஆற்றில் மூழ்கிய மாணவரை 2 நாட்களாக தேடி வந்த நிலையில் மாணவனின் சடலம் இன்று கரை ஒதுங்கியது.
புதுச்சேரி, வில்லியனூா் ஒதியன்பேட் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஹென்றி லூா்துராஜ். இவரது மகன் லியோ ஆதித்யன் (16). தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா் அந்தோணியுடன், லியோ ஆதித்யன் சங்கராபரணி ஆறு செல்லிப்பட்டு அணை பகுதிக்கு சென்று குளித்துள்ளார்.அப்போது, இருவரும் ஆற்றின் சுழழில் சிக்கி மூழ்கினா்.உடனே, அங்கிருந்தவா்கள் அந்தோணியை மீட்டு, தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
லியோ ஆதித்யன் ஆற்றில் மாயமானாா். இது குறித்து தகவல் அறிந்த திருக்கனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாணவர் ஆதித் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவரை மீட்க முடியாத நிலையில் நேற்று இரண்டாவது நாளாக படகுகள் மற்றும் ட்ரோன் மூலம் மாணவனை தேடினர்.இந்த நிலையில் இன்று காலை செல்லிப்பட்டு ஆற்றங்கரையோரம் மாணவனின் சடலம் கரை ஒதுங்கியது.மாணவனை உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், புதுச்சேரி அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தேடும் பணிகள் மெத்தனமாக இருந்ததால் மாணவனின் உயிர் பறிபோனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
No comments