Breaking News

மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் காரைக்காலில் பாஜக ஓபிசி அணி சார்பில் கொண்டாடப்பட்டது.

 


மறைந்த பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி காரைக்கால் மாவட்டபாரதிய ஜனதா கட்சி ஓ.பி.சி அணி சார்பில் காரைக்கால் மாவட்ட ஓ.பி.சி அணி தலைவர் கே.கார்த்திகேயன் தலைமையில் அன்பு நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டு பாஜக கொடியினை ஏற்றி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டிருந்த அடல் பிகாரி வாஜ்பாயின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, அதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அப்போது அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது.  

 இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் துரைசேனாதிபதி, பா.ஜ.க தொழில்துறை மாநில துணை தலைவர் சுரேஷ் கண்ணா, மாவட்ட செயலாளர் செந்தில்நாயகி, மற்றும் மாவட்ட, தொகுதி, அணி பிரிவு பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

No comments

Copying is disabled on this page!