புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட தொகுதி எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் களமருதூர் மற்றும் கிளியூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் 21 வகுப்பறை கூடிய புதிய கட்டிடத்திற்கு ருபாய் (1,41,36,00) மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கே வி முருகன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நஸருல்லா ஊராட்சி மன்ற தலைவர்கள் கதிரேசன் அலமேலு பாலு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் கவுன்சிலர் ஏழுமலை துணைத் தலைவர்கள் அய்யாசாமி சிலம்பரசன் நல்லாசிரியர் சூரியகுமார் ஊராட்சி செயல் அலுவலர் சீதாராமன் கிளியூர் தலைமை ஆசிரியர் ரோஸ்லின் கலைச்செல்வி உதவி தலைமை ஆசிரியர் வேல்முருகன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமுதா ஒப்பந்தரர் வெங்கடேசன் இன்ஜினியர் சரவணன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments