சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை..
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி, ரமேஷ் மற்றும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் அதிமுகவினர் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
No comments