குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா திருத்தம் செய்ய கோரி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள விஜயன்குப்பம் கிராமத்தில் முன்னுருக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் 50-க்கும் மேற்பட்டோருக்கு அரசு சார்பாக பட்டா வழங்கப்பட்டது இருந்த போதிலும் வழங்கப்பட்ட பட்டாவை திருத்தம் செய்யக்கோரி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாநிலை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது இந்த நிலையில் போராட்டம் நடத்துவதற்கு முன்பு உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் சமாதானம் கூட்ட நடத்துவதற்கு அழைத்துள்ளார் ஆனால் அவர்களை வெகு நேரம் ஆகியும் அழைக்காததால் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த வட்டாட்சியரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர் அப்போது போராட்டக்காரர்களிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சமாதான கூட்டத்தை நடத்தினார் அதில் உயர் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டு அதன் பின் பட்டா திருத்தம் செய்யப்படுவதாக உறுதி அளித்தனர்.
No comments