ஊராட்சி மன்ற தலைவர்கள் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தெரிவிக்காமல் ஆளுங்கட்சியினருக்கு நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒப்பந்தம் கொடுக்கப்படுவதாகவும் இந்த பணிகள் ஊராட்சிகளில் செய்யும்போது அதன் வரவு செலவு கணக்குகள் ஊராட்சிகள் தணிக்கை செய்ய வேண்டும் சூழல் உள்ளதால் அந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி 30-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர் அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய பின் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்பொழுது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு இந்த பணிகளை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததால் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது 50க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
No comments