பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு அன்னதானம் மற்றும் வேஷ்டி புடவைகள் வழங்கினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.கே வாசனுக்கு அவரது பிறந்த நாளை ஒட்டி அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வழிபட்டனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேஷ்டி சேலை மற்றும் அன்னதானம் வழங்கினர். முன்னதாக விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி , காலசம்கார மூர்த்தி உள்ளிட்ட சாமிகளுக்கு கட்சித் தலைவர் ஜி .கே வாசன் பெயரில் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் கே.எம்.ஜீ. சிங்காரவேலன் தலைமையில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அப்போது மயிலாடுதுறை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.சங்கர், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மகளிர் அணியினர் ஏராளமானோர் இருந்தனர்.
No comments