சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தற்போது உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் பரவலாக குளிர் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் பணி நடைபெற்று வந்த நிலையில் அதில் உள்ள சர்வீஸ் சாலையில் தற்போது பெய்த கனமழையால் திடீர் பள்ளம் முழங்கால் வரைக்கும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி ஏற்பட்டது போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அருகே செமிமாதேவி கிராமத்தில் வீடுகளில் இரவு நேரத்தில் தண்ணீர் புகுந்ததால் இந்த பகுதி மக்கள் வீடுகளில் இருந்து தண்ணீரை பாத்திரத்தின் மூலமாக வெளியேற்றி வருகின்றனர் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அருகே ரகுநாதபுரம் கிராமத்தில் ஏழுமலை ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான மக்காச்சோளம் பயிரிட்ட நிலையில் புயலின் காரணமாக மக்காச்சோளம் பயிர் தரையோடு சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
தொடர்ந்து குளிர் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்வதற்காக அரசு தரப்பில் உளுந்தூர்பேட்டை பகுதியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
No comments