நெட் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் மாவட்ட அணிக்காக விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்ற சீர்காழி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் சாதனை..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி, குட்சமா ரிட்டன் பப்ளிக் பள்ளி, குட் சமோ ரிட்டர்ன் நர்சரி பிரைமரி பள்ளி ஆகியவை இயங்கி வருகிறது.
மதுரையில் நடைபெற்ற 16 வயதிற்குட்பட்டோருக்கான தமிழ்நாடு மாநில நெட் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட அணிக்காக விளையாடி வெள்ளி பதக்கம் வென்ற சீர்காழி விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பள்ளியின் தாளாளர் கே. வி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அமெச்சூர் நெட்பால் கழகத்தின் மாநில துணை தலைவரும், குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளி இயக்குனருமான பிரவீன் வசந்த் ஜெபஸ் மற்றும் பள்ளி முதல்வர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.
No comments