Breaking News

முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த மாநில அளவிலான உயர்மட்ட கண்காணிப்பு குழு கூட்டம்..

 


ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த மாநில அளவிலான உயர்மட்ட கண்காணிப்பு குழு கூட்டம்


மத்திய அரசால் இந்தியா முழுவதும் பல சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


 இத்திட்டங்களின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிஉதவி மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்க வழிவகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு, ஆதி திராவிடர் நலன் மற்றும் பழங்குடியின நலத்துறையின் மூலம் காவல் துறையிடமிருந்து முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப் பத்திரிக்கை நகல் பெற்று நிதிஉதவி வழங்குவதோடு, அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில்,புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சட்டம் அமலாக்கத்தை மறுஆய்வு செய்வதற்கான மாநில அளவிலான உயர்மட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.


கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம்,சரவணகுமார்,சட்டப்பேரவைத் துணை தலைவர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா, தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர் ரவிவர்மன், ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் முத்தம்மா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் துறை கண்காணிப்பாளர்கள், நல ஆய்வாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!