முத்தியால்பேட்டையில் நடைபெற்ற மாநில அளவிலலான பெத்தாங்க போட்டி.
புதுச்சேரியில் மாநில அளவிலான பெத்தான் போட்டி டி வி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஓபன் எக்ஸ்போ மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த 42 கிளப் சார்பில் 300 அணிகள் பங்கேற்ற இறுதிப்போட்டி முத்தியால்பேட்டை டி வி நகரில் அமைந்துள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். முழுதாக சிறப்பு அழைப்பாளருக்கு டி வி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் சால்வி அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெத்தான் இறுதிப்போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர் போட்டிக்கான ஏற்பாடுகளை ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் செயலர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments