முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு சபாநாயகர் செல்வம்,அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் மலர் தூவி மரியாதை..
முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களது மறைவையொட்டி, கடற்கரைச் சாலையில் உள்ள மேரி கட்டட அரங்கில் அவரது திருவுருவப்படத்திற்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அன்னாரது திருவுருவப் படத்திற்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்,அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களது மறைவிற்கு பொதுமக்கள் நாளை வரை இங்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதுடன், ஏழு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என புதுவை அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments