ஆதரவற்ற பெண் சடலத்தை அடக்கம் செய்த சமூக சேவகர் குடியாத்தம் கோபிநாத் ..
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன் பட்டி பகுதியில் சகுந்தலை வயது(59) என்ற பெண் தனிமையில் வாழ்ந்து வந்தார் அவர் உடல் நலம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் இறந்து கிடந்தார் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் தெரிவித்தும் யாரும் சடலத்தை பார்க்க முன் வராத நிலையில் கொண்ட சமுத்திரம்(வி ஏ ஓ ) கிராம நிர்வாக அலுவலர் செந்தமிழ்ச்செல்வன் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத் தலைவரும் உயிர் அரக்கட்டளை நிறுவனருமான சமூக சேவகர் எம். கோபிநாத் அவரை தொடர்பு கொண்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டுகோள் வைத்தனர்
அதனை ஏற்று உடனடியாக எம். கோபிநாத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இறந்த பெண்ணின் உடலை குடியாத்தம் சுண்ணாம்புப்பேட்டை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று குடியாத்தம் நகராட்சி உதவியுடன் உரிய மரியாதையும் இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்தனர்
உடன் கிராம நிர்வாக உதவியாளர் வீர மணிகண்டன் மற்றும் யுனிவர் தேவையான ஆவணங்களை வழங்கினார் இதற்கான அனைத்து செலவுகளையும் சமூக சேவகர் உயிர் அறக்கட்டளை நிறுவனமான எம். கோபிநாத் ஏற்று செய்தார்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments