வாணியம்பாடி அருகே நுரைப்பொங்கி ஓடும் பாலாறு தோல் கழிவுநீரை திறந்து விடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு..
வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வரும் நிலையில் வாணியம்பாடி அடுத்த மாரப்பட்டு மேம்பாலத்தில் அருகே செல்லக்கூடிய பாலாற்றில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாராபட்டு பாலாற்றில் நுரை பொங்கி தூர்நாற்றத்துடன் பாலாறு வெள்ளம் சென்றது.
கடந்த சில தினங்களாக எவ்வித நுரையும் இன்றி சென்ற பாலாறு இன்று நுரை பொங்கி ஓடுவதால் பாலாற்று படுகையையொட்டியுள்ள சில தோல் தொழிற்சாலைகள் கனமழையை பயன்படுத்தி தோல் கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், பாலாற்றில் திறந்து விடுவதால், பாலாறு நுரை பொங்கி ஓடுவதாக சமூக ஆர்வலர்கள், குற்றம் சாட்டுகின்றனர்.ஏற்கனவே தோல் தொழிற்சாலைகளால் பாலாற்று நீர் குடிக்க முடியாத அளவு சீரற்று இருப்பதாகவும், இது போன்ற சில தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவு நீரை பாலாற்றில் விடுவதால் இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள், மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்
பு.லோகேஷ்.
No comments