Breaking News

தூத்துக்குடி ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் பணியாளர்களுக்கு பெங்களூருவில் திறன் பயிற்சி:


 

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஐ.டி.ஐ., பாலிடெக்னின் உள்ளிட்ட கல்லூரிகளில் இருந்து சுமார் 45 தொழில்நுட்ப பணியாளர்கள் பெங்களூருவில் நடைபெறும் திறன்பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களை ஆட்சித்தலைவர் இளம்பகவத் வழியனுப்பி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட தொழில்நுட்ப பணியாளர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் பயிற்சிக்காக பெங்களூருக்கு புறப்பட்டு சென்றனர். இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 2 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் 45 தொழில்நுட்ப பணியாளர்கள் பெங்களூரில் உள்ள டொயோட்டா டெக்னிக்கல் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் திறன் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டனர். இவர்கள் செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ஆட்சித்தலைவர் இளம்பகவத் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில், திறன் மேம்பாடு உதவி இயக்குநர் ஏஞ்சல் விஜயநிர்மலா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா, துணை கலெக்டர் (பயிற்சி) சத்யா உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments

Copying is disabled on this page!