Breaking News

பேன் ஃகாக் சிலாட் தற்காப்பு கலை போட்டியில் சர்வதேச அளவில் வெண்கலம் பதக்கம் வென்று சீர்காழி பள்ளி மாணவன் சாதனை.

 


பென் ஃகாக் சிலாட் தற்காப்பு கலை போட்டியில் சர்வதேச அளவில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சீர்காழி பள்ளி மாணவர். பதக்கம் வென்று ரயில் மூலம் சீர்காழி வருகை புரிந்த மாணவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு. சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி விவேகானந்தா குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் சஞ்சீவ். இவர் அபுதாபியில் நடைபெற்ற உலக அளவிலான 5-ஆவது பென்ஃகாக் சிலாட் தற்காப்பு கலை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று சாதனை புரிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். பதக்கம் வென்று சீர்காழி திரும்பிய மாணவர் சஞ்சீவிக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் சார்பில் ரோஜாப்பூ மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பேண்ட் வாத்தியங்கள் முழங்க குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் மாணவரை அமர வைத்து ஊர்வலமாக அழைப்பு சென்றனர் பள்ளிக்கு அழைத்து சென்றனர். வழி நெடுக்கிலும் சீர்காழி பகுதி பொதுமக்கள் மாணவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பள்ளியை வந்தடைந்த மாணவனுக்கு பள்ளியின் இயக்குனர் பிரவீன் வசந்த் ஜெபஸ் சந்தன மாலை அணிவித்து பாராட்டினார். பள்ளியின் முதல்வர் ஆபிரகாம், மக்கள் தொடர்பு அலுவலர் பிரேம், மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், திரளாக கலந்து கொண்டார்கள்.

No comments

Copying is disabled on this page!