சிலம்பாட்ட போட்டியில் சீர்காழி பெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவிகள் 5 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை...
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளின் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 3 தங்கம், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 1 தங்கம், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் 1 தங்கம், 4 வெள்ளி என பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளார்கள்.
பள்ளியின் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற 10 மாணவ, மாணவிகளையும், சிலம்ப பயிற்சி அளித்த பயிற்சியாளர் தினேஷ் ஆகியோரை பெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் SSN ராஜ்கமல், நிர்வாக அதிகாரி சீனிவாசன், முதல்வர் ராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பாராட்டினார்கள்.
No comments