புதுக்கோட்டையில் சித்த மருத்துவ முகாம் ஊராட்சித்தலைவர் ஜாக்சன் துரைமணி துவக்கி வைத்தார்!
புதுக்கோட்டை அருகே சூசை பாண்டியாபுரத்தில் சித்த மருத்துவ தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவ முகாமை குமாரகிரி ஊராட்சிமன்றத் தலைவர் ஜாக்சன் துரைமணி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட அரசு சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி அறிவுரையின்படி 8ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் ஆர்.சி.துவக்க பள்ளியில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை குமாரகிரி ஊராட்சிமன்றத் தலைவர் ஜாக்சன் துரைமணி தலைமை வகித்து துவக்கி வைத்தார். புதுக்கோட்டை சப்&இன்ஸ்பெக்டர் கல்யாண சுந்தரம் வாழ்த்தி பேசினார்.
இதில், பள்ளி மாணவ, மாணவியருக்கு யோகா மற்றும் பிராணாயாமம் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், அனைவருக்கும் முருகைக்கீரை சூப், கபசுரகுடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. சித்த மருத்துவர்கள் ரோஸற்றி, முருகேசன், கலைச்செல்வி, திலகவதி, ப்ரீத்தா ஆகியோர் சித்த மருத்துவத்தின் சிறப்பு குறித்து எடுத்துரைத்தனர். இதில், மருந்தாளுநர்கள் ஞானசுந்தரி, கணேசன், பல்நோக்கு பணியாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுகாதார அலுவலர்கள் சீனிவாசன், சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments