Breaking News

புதியதாக கட்டப்பட்ட கூட்டுடன்காடு ஊராட்சிமன்ற அலுவலகத்தை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!

 


ரூ.23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூட்டுடன்காடு ஊராட்சிமன்ற அலுவலகம் மற்றும் ராமச்சந்திரபுரம் பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூட்டுடன்காடு ஊராட்சியில் ரூ.23.56 லட்சம் மதிப்பில் புதிதாக ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் குமாரகிரி ஊராட்சி, ராமச்சந்திரபுரத்தில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. இதனை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும், கூட்டுடன்காடு ஊராட்சி, மேலகூட்டுடன்காடு பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் தேக்கத்தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ஐகோர்ட்ராஜா, பானு, ஒன்றிய பொறியாளர் ரவி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாங்கனி, ஜாக்சன் துரைமணி, சித்திரைசெல்வன், ஆனந்தகுமார், முத்துலட்சுமி, மகேஸ்வரி, பாலசுப்பிரமணியன், மாரிச்செல்வன், ஆனந்தி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, தெற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, கலைஇலக்கிய அணி பொன்னரசு, ஒன்றிய அவைத்தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய துணைச் செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், ஒன்றிய வழக்கறிஞர் அணி மகேந்திரன், தொண்டரணி சைமன், கூட்டுடன்காடு ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் முத்துலட்சுமி, கிளைச்செயலாளர்கள் சீனிவாசன், கல்லாத்தான், வள்ளிநாயகம், சேரந்தையன், ரவிக்குமார் மற்றும் கப்பிக்குளம் பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


செ. அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!