மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு செல்வகணபதி எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காரைக்கால் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீன்பிடி படகின் இயந்திரம் கோளாறால் இயந்திரத்தை இயக்க முடியாமல், அதிக அலைகள் காரணமாக படகு இலங்கை கடற்பரப்பிற்குள் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
18 மீனவர்கள், ரூ. 1.5 கோடி மதிப்புள்ள காரைக்கால் மீனவர் பால்மணி படகை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மீனவர்கள் குடும்பத்தினர் என்னை நேரில் சந்தித்து மீனவர்களையும், படகுகளை விடுவிக்க கோரிக்கை விடுத்தனர்.இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 18 பேரையும்,படகுடன் விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
No comments