கைக்கெட்டும் தூரத்தில் தாழ்வாக செல்லும் உயர் மின் அழுத்த கேபிளால் விபத்து ஏற்படும் அபாயம். அதிகாரிகள் அலட்சியம்..
புதுச்சேரி பெரியார் சிலையில் இருந்து திருவள்ளுவர் சாலை செல்லும் வழியில் 2 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளது.2-க்கும் இடையே உள்ள தூரத்தில் 5க்கும் மேற்பட்ட சிறிய வணிக கடைகள் இயங்கி வருகின்றன.
கடந்த வருடம் அந்தப் பகுதியில் ஏற்பட்ட மின்தடையை சரி செய்ய வந்த மின் துறை ஊழியர்கள் பணி செய்துவிட்டு, உயர் மின் அழுத்த கேபிள்களை கைக்கெட்டும் தூரத்தில் கடைகளின் வழியாக டிரான்ஸ்பார்மரில் இணைத்துவிட்டு சென்றுள்ளனர்.இதனால் விபத்து ஏற்பட்டால் உயிரழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர்கள் மின்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பணம் செலுத்தினால் மட்டுமே கேபிள்கள் மாற்றப்படும் என அலட்சியமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் சிறிய கடை வைத்திருக்கும் பெண் ஒருவர், மின்துறை அதிகாரிகள் அலட்சியம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
No comments