உப்பனாறு கழிவு நீர் வாய்க்கால் மீது மேம்பாலம் கட்டுவதில் நடைபெற்ற ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட கோரிக்கை..
புதுச்சேரி வாய்க்கால் கட்டமான பணியில் நடைபெற்ற ஊழல் மீது CBI விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் அவர்கள் உத்தரவிட கோரியும், பொதுமக்கள் நலன் கருதி மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க ஆளும் அரசை வலியுறுத்தி புதுச்சேரி அதிமுக சார்பில் ஆட்டுபட்டி உப்பனாறு கழிவுநீர் கால்வாய் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர். அப்போது, ரூ.27 கோடி செலவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாலம் ஏறத்தாழ ரூ.95 கோடி அளவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதில் ரூ.68 கோடி அளவிற்கு அவ்வப்போது இந்த பாலத்தை டெண்டர் எடுத்தவர்களுக்க இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு விஞ்ஞான ரீதியான ஊழல் என்றும், இந்த பாலம் கட்டுமான பணியில் அரசை எதிர்த்து ஆர்பிட்ரேஷனுக்கு சென்று இழப்பீட்டுத் தொகை கேட்ட தமிழகத்தை சேர்ந்த கே.எஸ். என்ற நிறுவனத்திற்கு மறுபடியும் இந்த பாலத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை அரசு அளிக்க முன்வந்துள்ளது.
இது போன்ற ஒரு அயோக்கியத்தனமான செயல் எந்த மாநிலத்திலும் நடக்காது என கூறியும், பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள பாலத்தை விரைந்து முடிக்கவும், இதன் கட்டுமான பணியில் நடைபெற்ற ஊழலின் மீது துணைநிலை ஆளுநர் அவர்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி கொஷங்களை எழுப்பினர். இதில் தவறு செய்த எந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இருந்தாலும் அவர்களின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்ய வேண்டும். இந்த போராட்டம் இத்துடன் ஓயாது என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பேட்டி: அன்பழகன், அதிமுக மாநில செயலாளர்.
No comments