தமிழ்நாடு முதல்வர் வழங்கிய நிவாரணப் பொருட்கள் பாகூர் தொகுதியைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார் !
தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, திருவள்ளுவர் மத்திய மாவட்ட திமுக சார்பில், அம்மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எம். நாசர் மூலம் 20 டன் அரிசி, 5000 புடவை, 5000 வேட்டி, 5000 பாய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை நேற்று புதுச்சேரி அனுப்பி வைத்தார்கள்.
தமிழ்நாடு முதல்வர் வழங்கிய நிவாரணப் பொருட்களை புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகூர் தொகுதி கொம்மந்தான்மேடு, பெரிய ஆராய்ச்சிக்குப்பம், சின்ன ஆராய்ச்சிக்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 600 குடும்பங்களுக்கு இன்று காலை வழங்கப்பட்டது
திமுக பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா கலந்து கொண்டு, புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், திமுக அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., துணை அமைப்பாளர் ஏ.கே. குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
No comments