ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண நிதி..
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தமிழக முதல்வர் நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து நிவாரண உதவி செய்ய இருந்த நிலையில் திடீரென விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதிகளில் பாலம் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் வந்ததால் நலத்திட்ட உதவி தவிர்க்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இஆப, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினார்கள். இதில் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சங்கராபுரம்
உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர்.
No comments