திருக்கடையூரில் ரேக்ளா பந்தயம் ஆலோசனைக் கூட்டம்..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தில்லையாடி உத்திராபதியார் மற்றும் நாராயணசாமி நினைவையொட்டி மாடு, குதிரை ரேக்ளா பந்தயம் கானும் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் காலை தொடங்கி மாலை வரை சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை என அனுமதிக்கப்பட்டு பின்னர் அவைகள் மாடுகள், குதிரைகள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் வருகின்ற கானும் பொங்கல் அன்று ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் தலைமை தாங்கினார், ரேக்ளாா பந்தைய நிர்வாகி பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு துணை தலைவர் பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற் குழு உறுப்பினர் சிம்சன், பாஜக மாவட்ட பொது செயலாளர் பாலாஜி குருக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமாலதி சிவராஜ் வரவேற்றார். கூட்டத்தில் இந்த ஆண்டு எல்கை பந்தயத்தை நடத்துவது, நிர்வாகிகள், மற்றும் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள் நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி ,ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது, 500 க்கும் மேற்பட்ட ரேக்ளா மாடு, குதிரைகளை பங்கேற்பது, விழாவிற்கு அமைச்சர், காவல்துறை, வருவாய்த்துறை, எம்.பி, எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் எம். எல். ஏக்கள் அழைப்பு விடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், அனைத்து கட்சி முக்கியபிரமுகர்கள் விழா குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
No comments