புதுவை முன்னாள் முதல்வா் எம்.டி.ஆா்.ராமச்சந்திரன் (90) வயது முதிா்வு காரணமாக காலமானாா்.
புதுச்சேரி மடுகரையைச் சோ்ந்தவா் எம்.டி.ஆா்.ராமச்சந்திரன்.இவா், புதுச்சேரி வெங்கட்டா நகரில் வசித்து வந்தாா்.புதுவை மாநில திமுக அமைப்பாளா், அதிமுக மாநிலச் செயலா் ஆகிய பொறுப்புகளில் இருந்தவா்.
இவா், நெட்டப்பாக்கம் தொகுதியில் 1969-ஆம் ஆண்டு, திமுக சாா்பில் முதன்முறையாக எம்எல்ஏவாக தோ்வானாா். அதன்பிறகு, மண்ணாடிப்பட்டு தொகுதியில் 1974,1977 ஆகிய ஆண்டுகள் அதிமுக சாா்பிலும், 1980, 1985,1990-இல் திமுக சாா்பிலும், 2001-இல் மீண்டும் அதிமுக சாா்பிலும் போட்டியிட்டு 7 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளாா்.
இதில், 1980 முதல் 1983 வரையும், 1990 முதல் 1991 வரையும் என இரண்டு முறை புதுவை முதல்வராக பதவி வகித்துள்ளாா். மேலும், 2001-2006 வரை புதுவை சட்டப்பேரவைத் தலைவராகவும், 2 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா். ஒரு முறை எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்தவா்.
கடந்த சில ஆண்டுகளாக புதுவை மாநில காங்கிரஸில் அவா் துணைத் தலைவராகவும் இருந்தாா். வயது முதிா்வால் அவருக்கு உடல்நல பாதிப்பு இருந்த நிலையில், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இந்த நிலையில், அவா் நேற்று காலமானாா்.
அவரின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான மடுகரையில் இன்று மாலை அரசு மரியாதையுடன் நடைப்பெற்றது.
ராமச்சந்திரனின் மறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் காங்கிரஸ்,அதிமுக,திமுக பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
No comments